புரட்சிகர மே தின
நல்வாழ்த்துக்கள்!
நல்வாழ்த்துக்கள்!
1886ல் சிக்காகோ நகரில்
எட்டு மணி நேர வேலை,
எட்டு மணி நேர ஓய்வு,
எட்டு மணி நேர உறக்கம்,
கேட்டு அமெரிக்க தொழிலாளர்கள்
நடத்திய போராட்டத்தில் தங்கள் உயிரை தியாகம்
செய்த தியாகிகளை நினைவு கூறும் வகையில்
ஆண்டு தோறும் மே தினம் கொண்டாடப்படுகிறது.
உழைப்பாளர் மக்களின் சமூக உரிமைகளுக்காவும்,
வர்க்க ஒற்றுமைக்காகவும் தெருக்களில் இறங்கி
அன்று போராடிய நமது தியாகிகளுக்கு
வீர வணக்கம் செலுத்திடுவோம்.
முதலாளித்துவம் மிக பெரிய நெருக்கடியில் இருப்பதாலும்,
நவீன முறையில் உழைப்பு சுரண்டல் செய்யப்படுவதாலும், தொழிலாளி வர்கம் நித்தம் போராடி வருவது வாடிக்கையாகிவிட்டது.
உழைக்கும் வர்கம் போராடி பெற்ற பல சலுகைகள்
இன்று கொடூரமாக, காட்டுமிராண்டித்தனமாக,
நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளால்
நசுக்க பட்டு வருகிறது.
"வேலையின்மைக்கு முற்று புள்ளி வைத்திடுவோம்"
என்ற உலக தொழிற்சங்களின் சம்மேளன மே தின
பிரகடனத்தை அமுல் படுத்த நடக்கும்
இயக்கங்களில் பங்கேற்போம்
மனிதனை மனிதன் சுரண்டாத
உலகத்திற்காக போராடுவோம்.
நமது BSNL உள்ளிட்ட பொது துறைகளை
பாதுகாக்க சபதம்மேற்போம்.
கிளைகளில் தேர்தல் நடத்தை விதி முறைகளுக்கு
கட்டுபட்டு, கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி,
கூட்டம் நடத்தி, மே தினத்தை கொண்டாடுவோம்.
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் திரளாக பங்கேற்போம்.
புரட்சிகர மே தின நல் வாழ்த்துக்களுடன்
தோழமையுள்ள
தோழமையுள்ள
E. கோபால்,
மாவட்ட செயலர்