Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, April 30, 2021

மருத்துவ முன் பணம்

 


கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு மருத்துவ முன் பணம் வழங்குவதற்கான உத்தரவை DIRECTOR(HR) வெளியிட்டுள்ளார்.


கொரோனா பெருந்தொற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு, மருத்துவ முன்பணம் வழங்குவதற்கான உத்தரவை DIRECTOR(HR) வெள்யிட்டுள்ளார். டெல்லி மற்றும் மும்பையில் உள்ள, தனிமை படுத்தப்பட்ட படுக்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், வெண்டிலேட்டர் இல்லாத ICUவில் அனுமதிக்கப்பட்டால் 2 லட்ச ரூபாய்களும், வெண்டிலேட்டருடன் கூடிய ICU எனில் 3 லட்ச ரூபாய்களும் முன்பணம் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

X,Y மற்றும் Z பிரிவு  நகரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்ட்டவர்களுக்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையில், முறையே 90%, 80% மற்றும் 75% அளவிற்கு முன்பணம் வழங்கப்படும். 

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, அவசர மருத்துவ முன்பணம் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையோடு, BSNL ஊழியர் சங்கம், 28.04.2021 அன்று DIRECTOR(HR) அவர்களுக்கு கடிதம் கொடுத்தது. 

மத்திய சங்கத்திற்கு நன்றிகளும், பாராட்டுக்களும்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்