27.04.2021, இன்று, சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு மற்றும் தோழர்கள் P. குமாரசாமி, S. ராமசாமி, D. சுப்பிரமணி பணி நிறைவு பாராட்டு விழா, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. கொரானா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, கொடியேற்ற நிகழ்வை தவிர்த்து ஏனைய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் M. சண்முகம் மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் R. முருகேசன் மாவட்ட அமைப்பு செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், TNTCWU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் C. பாஸ்கர் செயற்குழுவை துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். அவர்தம் உரை துவங்குவதற்கு முன், ஒப்பந்த ஊழியர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நீதி மன்ற உத்தரவை பெற்றதை கொண்டாடும் விதத்தில், கேக் வெட்டி இனிப்பு கொடுத்து மகிழ்ச்சி பரிமாறிக்கொள்ளப்பட்டது.
துவக்கவுரைக்கு பின், BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி சிறப்புரை வழங்கினார். பின்னர் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி மாவட்ட செயலர் தோழர் E. கோபால் விளக்கவுரை வழங்கினார்.
அதற்குப்பின் தோழர்கள் P. குமாரசாமி, D. சுப்பிரமணி ஆகியோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தோழர்களின் இயக்க பணிகள் நினைவு கூறப்பட்டு, கௌரவப்படுத்தப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்கள் ஆய்படு பொருள் மீதும், பணி நிறைவு தோழர்கள் இயக்க பணிகள் மீதும் உரை வழங்கியபின், தோழர்களின் ஏற்புரையும், மாவட்ட செயலரின் தொகுப்புரையும் வழங்கப்பட்டது.



















































































