Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 25, 2021

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் DIRECTOR(HR) உடன் சந்திப்பு


24.03.2021 அன்று தோழர் P.அபிமன்யு அவர்கள், DIRECTOR(HR) திரு அர்விந்த் வட்னேகர் அவர்களை சந்தித்து கீழ்கண்ட விஷயங்களை விவாதித்தார். இந்த சந்திப்பின் போது, திருமிகு சமிதா லூத்ரா GM(Rect) அவர்களும், திருமிகு அனிதா ஜோஹ்ரி GM(SR) அவர்களும் உடன் இருந்தனர்.

(1) நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் IDA வழங்குதல்:-

கேரள உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், ஊழியர்களுக்கு IDA வழங்குவது தொடர்பாக 23.03.2021 அன்று CMD BSNL உடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் தொடர்சியாக,  DIRECTOR(HR) அவர்களுடனும் விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் கேரள உயர்நீதிமன்ற உத்தரவு அமலாக்கப்படவில்லை எனில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வதை தவிர வேறு வழியில்லை என பொதுச்செயலர் DIRECTOR(HR) இடம் தெரிவித்துள்ளார்.

23.03.2021 அன்று CMD BSNL கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், அது தொடர்பான DoTயின் கருத்தினைக் கேட்டு, DoTக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக DIRECTOR(HR) தெரிவித்தார். 

(2) E-OFFICE முறையில் ஊழியர்களுக்கு PASSWORD வழங்குவது தொடர்பாக:-

பொதுச்செயலர், இது தொடர்பான கடிதத்தை DIRECTOR(HR)இடம் வழங்கி, E-OFFICE முறையில், ஊழியர்கள் ஓரம் கட்டப்படுவதாக, கடுமையான புகார் அளித்தார். DIRECTOR(HR) பதிலளிக்கையில், ஊழியர்கள் நிராகரிக்கப்பட மாட்டார்கள் என உறுதி அளித்ததுடன், ஏற்கனவே 10% ஊழியர்களுக்கு PASSWORD மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விவாதத்திற்கு பின் 25% ஊழியர்களுக்கு PASSWORD மற்றும் மின்னஞ்சல் முகவரி தரப்படும் என DIRECTOR(HR) உறுதி அளித்துள்ளார்.

(3) DoTயில் தேர்வு செய்யப்பட்டு, 01.10.2000க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு PRESIDENTIAL ORDER வழங்குவது:-

DoTயில் தேர்வு செய்யப்பட்டு, 01.10.2000க்கு பின் பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, PRESIDENTIAL ORDERகள் வழங்கப்பட வேண்டும் என கேரள மற்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. எனினும், இந்த தீர்ப்புகளை எதிர்த்து, BSNL நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைவில் முடிவுக்கு கொண்டு வர BSNL நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுச்செயலர் வலியுறுத்தினார். 

இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக DIRECTOR(HR) உறுதி அளித்துள்ளார்.

(4) ஊதிய மாற்றம்:-

ஊதிய மாற்றக் குழுவின் பேச்சு வார்த்தை உடனடியாக மீண்டும் துவங்க வேண்டும் என பொதுச்செயலர் கோரிக்கை வைத்தார். தற்போது ஊழியர்கள் பலர், ஊதிய தேக்க நிலையை அடைந்துள்ளதை சுட்டிக்காட்டி, அதற்கு ஊதிய மாற்றமே தீர்வு என்பதையும் வலியுறுத்தினார். 

ஆனால் இதற்கு DIRECTOR(HR) சரியான பதிலை தரவில்லை.

(5) இலாகா தேர்வுகளை நடத்துவது:-

இலாகா தேர்வுகளை நடத்துவதில் கடுமையான காலதாமதம் ஏற்பட்டு வருவதை மீண்டும் DIRECTOR(HR)ன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சீரமைப்பு பணிகள் 2021, ஏப்ரல் மாதத்தில் முடிவடையும் என ஏற்கனவே CMD BSNL உறுதி அளித்துள்ளார். இலாகா தேர்விற்கான பணிகள் தற்போதே துவங்க வேண்டும் என்றும், அதன் மூலம் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்ற உடனேயே இலாகா தேர்வுகளை நடத்தலாம் என பொதுச்செயலர் வலியுறுத்தினார். 

இந்த கோரிக்கையினை DIRECTOR(HR) மற்றும் GM(Rectt) ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்