Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, March 22, 2020

மார்ச் 22 BSNLEU அமைப்பு தினம்



அனைவருக்கும் BSNLEU அமைப்பு தின நல் வாழ்த்துக்களை சேலம் மாவட்ட BSNLEU சார்பாக தெரிவித்து கொள்கிறோம். விசாகப்பட்டினத்தில் 2001 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நமது BSNL ஊழியர் சங்கம் 19ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து 20ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

உருவான 3 ஆண்டுகளில், ஊழியர் ஆதரவுடன் கிடைக்க துவங்கிய ஜனநாயக வெற்றி 16 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஆம்., 2004 முதல் BSNLEU சங்கம் தான் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை சங்கம். ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற கடந்த 7 தேர்தலில்களிலும் ஊழியர்கள் தங்கள் ஆதரவை நாடு முழுவதும், BSNLEU சங்கத்திற்கு வழங்குகிறார்கள் என்றால் சங்கத்தின் சமரசமற்ற போராட்டங்கள் தான் அதற்கு பிரதான காரணம். 

BSNL நிறுவனத்தை சீர்குலைக்க மாறி மாறி வரும் அரசாங்கங்கள் தொடர்ந்து வித விதமான தாக்குதல்கள் தொடுத்த போதெல்லாம் ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் அதை எதிர்த்து, BSNL நிறுவனத்தை தொடர்ந்து காத்து வருகிறோம். நாம் இன்று அனுபவிக்கும் பல சலுகைகள் வர்க நலனோடு, தியாக உணர்வோடு பல தோழர்கள் நடத்திய போராட்டத்தின் பலன் தான் என்பதை நினைவில் வைத்து, அவர்கள் காட்டிய பாதையில், சங்க பதாகையை என்றும் உயர்த்தி பிடிப்போம். 

அரசாங்கத்தின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை முறியடித்து, BSNL நிறுவனத்தை காப்போம். மறுக்கப்பட்டு வரும் மூன்றாவது ஊதிய மாற்றத்திற்கும், நிலுவையில் உள்ள ஊழியர் பிரச்சினைகளுக்கும், ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகளுக்கும் பணி ஓய்வு பெற்ற தோழர்களின் பென்சன் மாற்றம் உட்பட்ட அனைத்து உரிமைகளுக்கும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் தொடர்ந்து போராடும் என்று உறுதியளிக்கிறோம்.

BSNL நிறுவனத்தை காப்போம். BSNL ஊழியர்களை வளமாக்குவோம். BSNLEU பேரியக்கத்தை மேலும் பலமாக்குவோம்.

அமைப்பு தின நல் வாழ்த்துக்களுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர்