Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, February 22, 2020

AUAB சார்பாக உண்ணாவிரதம்


24.02.2020, காலை 10.00 மணி முதல், சேலம் PGM அலுவலகம் 


AUAB போராட்ட அறைகூவலுக்கிணங்க, 24.02.2020 அன்று நாடு முழுவதும், மாவட்ட தலை நகரங்களில், கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. 

அதன்படி, நமது சேலம் மாவட்ட AUAB சங்கங்கள் சார்பாக, 24.02.2020, திங்கட்கிழமை அன்று சேலம் PGM அலுவலகத்தில், காலை 10.00 மணி முதல் போராட்டம் நடைபெறும். 

கிளை செயலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, மாவட்டம் முழுவதும் பெரும்பான்மையான ஊழியர்களை திரட்ட வேண்டும். 
கோரிக்கைகள் 



1. 2020 ஜனவரி மாத ஊதியத்தை உடனே வழங்கு.

2. ஒவ்வொரு மாதமும் முறையாக ஊதியம் வழங்கிடு.

3.  ஊழியர்களின் ஊதியத்தில் ஏற்கனவே பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உடனடியாக அந்தந்த அமைப்புகளுக்கு செலுத்திடு.

4.  BSNLன் 4G சேவைகளை உடனடியாக துவங்கிடு.

5. BSNL கடன் பத்திரங்களை வெளியிட அரசின் உத்தரவாதத்தை உடனடியாக வழங்கிடு.

6.  FR 17(A)ன் கீழ் வழங்கப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக திரும்ப பெற்றிடு.

7.  VRS அமலாக்கப்பட்டதன் காரணமாக, ஊழியர்களை தன்னிஷ்டப்படி மாற்றல் செய்யக் கூடாது. 

8.  ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்கு. 

ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU