Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 16 December 2019

JE இலாகா தேர்வை விரைவில் நடத்த வேண்டும் என BSNLEU கோரிக்கை

Related image



JE இலாகா தேர்வை OFF LINE மூலம் நடத்த வேண்டும் என்கின்ற BSNL ஊழியர் சங்கத்தின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டு ஏற்கனவே முடிவெடுத்துள்ளது. இந்த மாற்றத்தின் காரணமாக 07.04.2019 அன்று நடைபெற இருந்த JE இலாகா தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர், BSNL ஊழியர் சங்கம் பலமுறை கோரிக்கை வைத்த பின்னரும், அந்த தேர்வு இதுவரை நடைபெறவில்லை. 

இதனிடையில் 2018-19 காலிப்பணியிடங்களுக்கான,  JE இலாகா தேர்வும் நடத்த வேண்டிய காலக்கெடு வந்து விட்டது. எனவே மேலும் கால தாமதமின்றி 2017-18 மற்றும் 2018-19 ஆகிய வருடங்களில் உருவான காலி பணியிடங்களுக்கான JE இலாகா தேர்வை விரைவில் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் மிகவும் அழுத்தமாக வற்புறுத்தி DIRECTOR(HR) அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும் 

தகவல்: மத்திய/மாநில சங்க வலைத்தளம்