Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, 16 December 2019

உறுப்பினர் படிவம் புதிய உத்தரவு

Image result for union

சங்க உறுப்பினர் படிவத்தை மாற்றுவது தொடர்பாக கார்ப்பரேட் அலுவலகம் கடிதம் வெளியீடு


ஊழியர்கள், தங்கள் விருப்பத்திற்கேற்ப சங்க உறுப்பினர் படிவத்தை மாற்றிக் கொடுப்பது தொடர்பான ஒரு கடிதத்தை 06.12.2019 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு வெளியிட்டிருந்தது. ஊழியர்கள், ERP மூலமாகத்தான் உறுப்பினர் படிவத்தை மாற்ற முடியும் என அந்தக் கடிதத்தின் ஒரு முன்மொழிவு இருந்தது. முன்மொழிவின் இந்த பகுதிக்கு BSNL ஊழியர் சங்கம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து 09.12.2019 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தது. 

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோடு விவாதிக்காமல், இது போன்ற மாற்றங்களை அமலாக்குவதற்கும் தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இந்த விஷயங்களை 11.12.2019 அன்று BSNL ஊழியர் சங்கம், GM(SR) அவர்களோடு விவாதித்தது. நாம் எதிர்ப்பு தெரிவித்திருந்த அந்த பிரிவை மட்டும் தவிர்த்து 12.12.2019 அன்று டில்லி கார்ப்பரேட் அலுவலகம் புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 
1) எதிர்வரும் 16.12.2019 முதல் 15.01.2020 வரை நடைபெற உள்ள உறுப்பினர் படிவத்தை மாற்றி சமர்ப்பிப்பதை கைவிடுவது.

2) இதற்கு பின்னர் ஜூன் 16 முதல் ஜூலை 15 வரை என்கின்ற அளவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உறுப்பினர் படிவத்தை மாற்றி கொடுக்க முடியும்.

இந்த இரண்டு மாற்றங்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் தனது ஒப்புதலை கொடுத்துள்ளது.


தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
தகவல்: மத்திய/மாநில சங்க வலைத்தளம்