Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, November 12, 2019

கீழ் மட்ட ஊழியர்களுக்கு பலன் இல்லாத VRS

Image result for bsnleu
மாநிலச் செயலாளர் அறிக்கை


விருப்ப ஓய்வுத் திட்டம் மிகக் கவர்ச்சிகரமாக உள்ளதாக  BSNL   நிர்வாகமும், அவர்களின் ஏஜெண்டுகளும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.  ஆனால் அடித்தட்டு ஊழியர்களுக்கு அது பலனளிப்பதாக இல்லை. உண்மையைச் சொல்வதானால், டெலிகாம் டெக்னிசியன்  போன்ற அடித்தட்டு ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சென்றால் மிகப் பெரிய இழப்பைச் சந்திப்பார்கள்.ரூ. 21,730 அடிப்படை ஊதியம் பெறுகின்ற, இன்னும் 3 ஆண்டுகள் 4 மாதங்கள் சேவைக் காலம் உள்ள ஒரு டெலிகாம் டெக்னிசியன் குறித்த விவரங்கள் கீழே தரப் பட்டுள்ளன :

ஊதியத்தில் இழப்பு 

இந்த டெலிகாம் டெக்னிசியன் ஊழியர்,  விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சென்றால், அவர் EX GRATIA தொகையாக    ரூ. 16,42,800/-  பெறுவார். ஆனால் அவர் தனது 60 வயது வரை பணியில் இருந்தால், சம்பளம் மற்றும் பஞ்சப் படியாக ரூ. 21,90,400/- பெறுவார். அதாவது, விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சென்றால், சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் மட்டும் ரூ. 5,47,600/- அவருக்கு நஷ்டமாகும். மேலும், இந்த EX GRATIA தொகையான ரூ. 16,42,800/- -இல் வருமான வரி கழிக்கப் பட்டு விடும். மேலும், சொசைட்டி கடன், வங்கிக் கடன் மற்றும் வீடு கட்ட கடன் போன்ற பல்வேறு பிற கடன்களுக்கான பாக்கித் தொகை கழிக்கப் படும். கடைசியாக அந்த ஊழியர் மிகக் குறைவான தொகையையே EX GRATIA தொகையாக பெறுவார்.

வீட்டு வாடகை இழப்பு

இதற்கு மேலும், ’சி’ பிரிவு நகரத்தில் பணி புரிந்தாலும், அதற்கான 10% தொகை, வீட்டு வாடகைப் படி ரூ. 2173/- தொகையை, அவர் ஒவ்வொரு மாதமும் இழப்பார். 3 ஆண்டுகள், 4 மாதங்களில் அவருக்கு ரூ. 86 920/- இழப்பு ஏற்படும். 

ஆண்டுயர்வுத்தொகையிலும் இழப்பு
     
மேலும், 60 ஆண்டில் பணி ஓய்வு பெறும் வரை அவர் பணியில் தொடர்ந்தால், 3 ஆண்டுயர்வுத் தொகையை அவர் பெறுவார். இந்த 3 ஆண்டுயர்வுத் தொகைகள், 60 வயதில் அவர் ஓய்வு பெறும் போது, கூடுதல் ஓய்வூதியமாகப் பலனளிக்கும்.

காலங்காலமாக ஓய்வூதியத்தில் இழப்பு

இந்த ஊழியர், விருப்ப ஓய்வுத் திட்டத்தில் சென்றால், ஓய்வூதியமாக ரூ. 10,865/- பெறுவார். ஆனால், 3 ஆண்டுகள் 4 மாதங்களுக்குப் பிறகு தனது 60-வது வயதில் ஓய்வு பெற்றால், 3 ஆண்டுயர்வு தொகையையும் கணக்கில் எடுத்து, ஓய்வூதியமாக ரூ. 11 885/- பெறுவார்.   ஆக, அடிப்படை ஓய்வூதியத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அந்த ஊழியருக்கு ரூ. 1020/- இழப்பு ஏற்படும். அதனுடன், ஒவ்வொரு மாதமும், அடிப்படை ஓய்வூதியத்தின் மீதான பஞ்சப் படி தொகையிலும் இழப்பு ஏற்படும். இன்றைய 152% பஞ்சப்படி விகிதத்தை வைத்துக் கணக்கிட்டால் கூட, ரூ, 1 550/- இழப்பு ஏற்படும். எனவே, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தில் மொத்த இழப்பு     ரூ. 2 570/- ஏற்படும்.  அவரது வாழ்க்கையின் இறுதிக் காலம் வரை மட்டுமல்ல  குடும்ப பென்சனிலும் (  FAMILY PENSION ) இது மிகப் பெரிய இழப்பாக அந்த ஊழியரின் குடும்பத்திற்கு  அமையும். இதற்கு மேலும், பணிக்கொடைத் தொகையிலும், ஓய்வூதிய கம்யுடேஷன் தொகையிலும் அவருக்கு இழப்பு ஏற்படும்.

உலாவரும் வதந்திகள்

ஊழியர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், பெரிய எண்ணிக்கையில் அவர்களை விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு மனுச்செய்ய வைப்பதற்காகவும், ஏராளமான வதந்திகள் பரப்பி விடப் படுகின்றன. இவ்வாறு பரப்பப் படும்  வதந்திகளுக்கும், குழப்பங்களுக்கும் பின்வரும் பதில்களை அளிக்கிறோம்.

பணி ஓய்வு வயது 58 ?

பணி ஓய்வு வயதை 58- ஆகக் குறைப்பதற்கான முடிவை மத்திய அமைச்சரவை ஏற்கனவே எடுத்து விட்டதாகப் பரப்பப் படும் வதந்திகளினால் ஏராளமான ஊழியர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்திற்கு மனுச் செய்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். அவ்வாறு முடிவெடுத்திருந்தால் அது பகிரங்கமாக இதுவரை அறிவிக்கப் படாதது ஏன் ? பணி ஓய்வு வயதை 58 ஆண்டுகளாகக் குறைப்பதற்கு மந்திரிசபையால் அத்தகைய முடிவு எதுவும் எடுக்கப் படவில்லை என்பதே உண்மை.

ஊழியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தவும், விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல வேண்டும் என்று நிர்பந்திப்பதற்காகவும் மட்டுமே இத்தகைய வதந்திகளை விஷமத்தனமான சக்திகள் பரப்பி வருகின்றன. மேலும், பணி ஓய்வு வயதை 58 ஆகக் குறைப்பதற்கு அனைத்து அங்கீகாரம் பெற்ற தொழிற்சங்க அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. 

33 ஆண்டு காலம் பணி முடித்தவர்களை வெளியேற்றப்பொகின்றார்களா ?

33 ஆண்டு காலம் பணி அல்லது 60 வயது இவற்றில் எது முந்தையதாக உள்ளதோ, அத்தகைய ஊழியர்களை வெளியேற்றுவதற்கு அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாகவும் ஏராளமான வதந்திகள் பரப்பப் படுகின்றன. இது முற்றிலும் பொய்யான தகவலாகும்.  இத்தகைய ஆலோசனை அரசாங்கத்திற்கு இல்லை என  24.9.2019  தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது.
விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்கும் முன் ஒவ்வொரு அடிமட்ட ஊழியரும் இவைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தோழமையுடன்
S. சுப்பிரமணியம்
மாநிலச் செயலர் ( பொறுப்பு )   
11 11 2019

தகவல் ஆதாரம்: BSNLEU மத்திய சங்க இணையம்