Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, February 20, 2019

வேலை நிறுத்தம் பிரம்மாண்ட வெற்றி!


AUAB கூட்ட முடிவுகள் 

20.02.2019 இன்று, டில்லியில் AUAB கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அனைத்து சங்க பொது செயலர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 3 நாட்கள் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மத்திய  AUAB தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டது.   வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிய மாநில மாவட்ட AUABக்களுக்கும் பாராட்டுதல்களையம்  தெரிவித்துக் கொண்டது. 

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது. 

1) டெல்லியை சுற்றி உள்ள மாநிலங்களில் இருந்து ஊழியர்களை திரட்டி 06.03.2019 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி. 

2) 28.02.2019 க்குள் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனு வழங்குவது. 

3) பாரத பிரதமர் மற்றும் தொலை தொடர்பு அமைச்சர் ஆகியோருக்கு ட்விட்டரில் செய்தி அனுப்புவது.

4) பல்வேறு வாய்ப்புகளையும் பயன்படுத்தி, சாத்தியப்பட்ட இடங்களில் எல்லாம் தொலை தொடர்பு அமைச்சரை சந்திப்பது.

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU