Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, February 20, 2019

நெஞ்சு நிறை நன்றிகள்!

Image result for நன்றி

BSNL நிறுவனத்தின் புனரமைப்பிற்காகவும் , ஊழியர்களின் ஊதிய மாற்றத்திற்காவும் 18.02.2019 முதல் 20.02.2019 வரை மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட, BSNLலில், பணிபுரியும் ஊழியர்களையும், அதிகாரிகளையும் மத்திய AUAB கேட்டு கொண்டது. பொது மக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆதரவை பெறுவதற்காக 11.02.2019 முதல் 15.02.2019 வரை தெரு முனைப் பிரச்சார கூட்டங்களை நடத்தவும் அறைகூவல் கொடுத்திருந்தது. 

நமது சேலம் மாவட்டத்தில் AUAB கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் ஆதரவோடு ஐந்து நாட்களும் மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் தெரு முனை பிரச்சார இயக்கங்களை வெற்றிகரமாக கிளைகள் நடத்தியது. பல கிளைகளில் கோரிக்கை விளக்க கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டது. வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு திரட்ட பல இடங்களில் ஊழியர்களை நேரடியாக சந்தித்து நமது மாவட்ட, கிளை சங்க தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

மூன்று நாள் போராட்டத்தின் போது  கிளைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. மாவட்ட கூட்டமைப்பு சார்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.  ஊடகங்களுக்கு வேலை நிறுத்த செய்திகள் தெரிவிக்கப்பட்டது. கிளைகளும் ஊடகங்களுக்கு செய்திகள் கொடுத்தது. அது பிரசுரமும் ஆகி, போராட்டத்திற்கு ஆதரவும் விளம்பரமும் கிடைத்தது. 

சேலம் மாவட்டத்தில் போராட்டத்தை வெற்றி பெற செய்ய கடுமையாக களப் பணியாற்றிய கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், மாநில சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர் தோழியர்களுக்கும் நமது நெஞ்சு நிறை நன்றிகள். 

ஒப்பந்த ஊழியர்கள் பங்கு மகத்தானது 

முறையாக ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயற்குழுவை கூட்டி, பல கிளைகளில் கிளை கூட்டங்கள் நடத்தி, தெரு முனைப் பிரச்சார கூட்டங்களில் அதிகப்படியாக கலந்து கொண்டு, ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்று, சம்பள இழப்பை பொருட்படுத்தாமல், 100 சதம்  முழுமையாக போராட்டத்தில் பங்குபெற்ற ஒப்பந்த ஊழியர்களின் பணி மகத்தானது. அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள். 

ஆதரவு நல்கிய தோழமை சங்கங்கள், ஊடக நண்பர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் அனைவருக்கும் நமது நன்றிகள். 

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், AUAB மற்றும் 
மாவட்ட செயலர் BSNLEU