Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, December 23, 2018

பாலியல் அடிமையாக்கப்பட்டவர் பயங்கரவாத எதிர்ப்பு போராளியானார்!



நொடிப்பொழுதே வாழ்ந்தாலும் சுதந்திரமாக வாழ வேண்டுமென்ற உறுதியும், எழுச்சியும் ஒருவர்மனதில் உருவானால்அவரின் விடுதலையை யாராலும் தடுக்க முடியாது.“இஸ்லாமிய  அரசு” என்ற அமைப்பின் பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக்கப்பட்ட ஒரு பெண் அவர்களிடமிருந்து போராடித் தப்பித்து சுதந்திரக்காற்றை சுவாசித்த உண்மைக்கதை நூலாக வெளியாகியுள்ளது. “பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கடைசிப்பெண்ணாக நான் இருக்க வேண்டும்” என்று ஐ.நா. மன்றத்தில் முழக்கமிட்ட நாடியா முராட் என்ற அந்தப்பெண்ணின்  சுயசரிதை படிப்பவர்களை உலுக்குவதாகஅமைந்திருக்கிறது. இந்த ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு அவருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசு அவரின் சுயசரிதை நூலுக்காகவழங்கப்பட்டது அல்ல; ‘இஸ்லாமிய அரசு’ என்றபயங்கரவாத அமைப்பிடம் இருந்து உயிரைப் பணயம்வைத்து தப்பி வந்ததோடு, அந்தப் பயங்கரவாதத்தை உறுதியாக எதிர்த்து வருவதற்காகத்தான். பாலியல் கொடுமையால் சிதைக்கப்பட்ட பெண்களுக்கு அர்ப்பணிப்போடு சிகிச்சை அளித்து வரும்டெனிஸ் முக்வெஜ் என்ற காங்கோ நாட்டு மருத்துவர் இப்பரிசின் மறுபகுதியை பகிர்ந்துகொண்டார்.

இராக்கை பாழாக்கிய அமெரிக்கா

 நாடியா இராக் நாட்டைச் சார்ந்தவர். கோச்சோ என்பதுஅவரது கிராமம். அவர் யாசிடி என்ற மதத்தைச் சார்ந்தவர். உலக அளவில் இந்த மதத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 10 லட்சம் மக்கள் மட்டுமே உள்ளனர். பள்ளி மாணவியான  நாடியா 10 வயதை எட்டிய போது, (2003)அமெரிக்கா இராக்கின் மீது யுத்தம் தொடுத்து ஆக்கிரமித்தது. அமெரிக்க ஆக்கிரமிப்பினால் இராக்சின்னாபின்னமாகி விட்டது என்றும், அதை சீர் செய்வதுகடினமானது என்றும் நாடியா தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார். இராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக குற்றம் சாட்டி யுத்தம் தொடுத்த அமெரிக்கா அந்நாட்டைக் கைப்பற்றியது. பொய்யான குற்றச்சாட்டை சொல்லிவந்த அமெரிக்காவால் ஒரு பேரழிவு ஆயுதத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.  ஆனால், இராக் சமூகம் சீர்குலைக்கப்பட்டது. உயிர்காக்கும் மருந்துகள் இல்லாமல் லட்சக்கணக்கான குழந்தைகள் மடிந்தனர். சதாம் உசேன் தூக்கிலிட்டுக்  கொல்லப்பட்டார். இராக் அதிபராக இருந்த சதாம் உசேன் எதேச்சதிகார முறையில் செயல்பட்டிருந்தாலும், நாட்டின்எண்ணெய் வயல்களை அரசாங்க சொத்துக்களாக மாற்றினார். அவற்றில் இருந்து கிடைத்த வருவாயில் மக்களுக்கு பலநன்மைகளைச் செய்தார். சன்னி, ஷியா, சுஃபி,  கிருத்துவர்கள் ஆகியோரிடையே முரண்பாடுகள் வெடிக்காமல் இருப்பதை உத்தரவாதம் செய்தார். மக்களின் வாழ்நிலை வளர்ந்த நாட்டுக்கு இணையாக ஆகியது.ஆனால், அமெரிக்க ஆக்கிரமிப்புக்குப் பின் அங்கு எல்லாம் பாழாகி விட்டது. 

பயங்கரவாதிகளின் பின்புலம்

இராக் நாட்டு எண்ணெய் எரிவாயு வளங்களைஅமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் ஒட்டச்சுரண்டுகின்றன. சன்னி, ஷியா என்ற இஸ்லாமியப் பிரிவு  மக்களுக்கிடையில் மோதல் உருவாக்கப்பட்டு, சமூகம் பிளவுபட்டுக் கிடக்கிறது. இராக்கின் ஒரு பகுதியான குர்திஷ்இன மக்கள் தனி நாடு கேட்டுப் போராடுகிறார்கள்.இத்தகைய பின்னணியில்தான் இராக், சிரியா,ஈரான்,லிபியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு இஸ்லாமியஅரசை உருவாக்க வேண்டுமென்ற முழக்கத்துடன் ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உருவானது. அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கும் ஈரான்,லிபியா, சிரியா ஆகிய நாடுகளுக்கெதிராக ஐஎஸ்ஐஎஸ்அமைப்பை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது. தலிபான், அல்கொய்தா,ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் வரலாற்றை ஆய்வுசெய்தால் இந்த அமைப்புகளுக்கு அமெரிக்கப் பின்புலம்இருப்பது தெரியவரும். சிரியாவில் மதச்சார்பற்ற தன்மையுள்ள ஆசாத்தலைமையிலான ஆட்சியை அகற்றிட அவ்வரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ்- அமைப்பிற்கு ஆயுத உதவி உட்பட செய்து அமெரிக்கா முழுமையாகப் பயன்படுத்தியது. ஆனாலும் தற்போது ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின்தலையீட்டால் ஐஎஸ்ஐஎஸ் சிரியாவில் தனிமைப்பட்டு நிற்கிறது. தங்களுடைய “இஸ்லாமிய அரசு” என்ற நோக்கத்தோடு தான், ஐஎஸ்ஐஎஸ் உலகத்தில் பலநாடுகளிலிருந்து இளைஞர்களை படையில் சேர்த்தது. இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள்அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தும் வேலையில் ஐஎஸ்ஐஎஸ் இறங்கியது. இந்தநோக்கத்தோடுதான் ஆயுதமேந்திய ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதிகள் நாஇராக் நாட்டு எண்ணெய் எரிவாயு வளங்களைஅமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் ஒட்டச்சுரண்டுகின்றன. சன்னி, ஷியா என்ற இஸ்லாமியப் பிரிவு  மக்களுக்கிடையில் மோதல் உருவாக்கப்பட்டு, சமூகம் பிளவுபட்டுக் கிடக்கிறது. இராக்கின் ஒரு பகுதியான குர்திஷ்இன மக்கள் தனி நாடு கேட்டுப் போராடுகிறார்கள்.இத்தகைய பின்னணியில்தான் இராக், சிரியா,ஈரான்,லிபியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு இஸ்லாமியஅரசை உருவாக்க வேண்டுமென்ற முழக்கத்துடன் ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு உருவானது. அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கும் ஈரான்,லிபியா, சிரியா ஆகிய நாடுகளுக்கெதிராக ஐஎஸ்ஐஎஸ்அமைப்பை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துகிறது. தலிபான், அல்கொய்தா,ஐஎஸ்ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் வரலாற்றை ஆய்வுசெய்தால் இந்த அமைப்புகளுக்கு அமெரிக்கப் பின்புலம்இருப்பது தெரியவரும். சிரியாவில் மதச்சார்பற்ற தன்மையுள்ள ஆசாத்தலைமையிலான ஆட்சியை அகற்றிட அவ்வரசுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ்- அமைப்பிற்கு ஆயுத உதவி உட்பட செய்து அமெரிக்கா முழுமையாகப் பயன்படுத்தியது. ஆனாலும் தற்போது ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளின்தலையீட்டால் ஐஎஸ்ஐஎஸ் சிரியாவில் தனிமைப்பட்டு நிற்கிறது. தங்களுடைய “இஸ்லாமிய அரசு” என்ற நோக்கத்தோடு தான், ஐஎஸ்ஐஎஸ் உலகத்தில் பலநாடுகளிலிருந்து இளைஞர்களை படையில் சேர்த்தது. இந்த நான்கு நாடுகளைச் சேர்ந்த மக்கள்அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமென கட்டாயப்படுத்தும் வேலையில் ஐஎஸ்ஐஎஸ் இறங்கியது. இந்தநோக்கத்தோடுதான் ஆயுதமேந்திய ஐஎஸ்ஐஎஸ்பயங்கரவாதிகள் நாடியா வசித்து வந்த கிராமத்துக்கு2014ஆம் ஆண்டு சென்றனர். டியா வசித்து வந்த கிராமத்துக்கு2014ஆம் ஆண்டு சென்றனர். 

15 மாதங்கள்...

யாசிடி மதத்தைச் சார்ந்த அம்மக்களை இஸ்லாம்மதத்தில் சேர கட்டாயப்படுத்தினார்கள். சேர மறுத்தநாடியாவின் 6 சகோதரர்கள் உள்ளிட்ட ஆண்களையும்,வயதான பெண்களையும்  அங்கேயே சுட்டுக் கொன்றுபுதைத்தனர். நாடியா உள்ளிட்ட பல நூறு இளம்பெண்களைசிரியாவுக்கு கடத்திச் சென்றனர். சில நாட்களுக்குப் பிறகுநாடியாவின் தாயையும் கொன்றுவிட்டனர். 2014ஆம் ஆண்டு கடத்தப்பட்ட நாடியா 15மாதங்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அடுத்தடுத்து அவர் விற்கப்படுவார். இந்த வாரம் ஒருஊர், அடுத்த வாரம் இன்னொரு ஊர்,அதற்கடுத்த வாரம்இன்னொரு நகர் என்று பாலியல் அடிமையாக விற்பனைசெய்யப்பட்டார். இச்சமயத்தில் அவர் உடலின் மீதுநிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.முதலில் சிரியா நாட்டில் உள்ள மோசுல் என்ற நகரத்தில் ஒரு நீதிபதிக்கு நாடியாவை விற்றார்கள். யாசிடிமதத்தைச் சார்ந்த பல நூறு இளம் பெண்களை பாலியல்அடிமைகளாக ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தினர். பாலியல் கொடுமை தாங்க முடியாமல் பலபெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். பலமுறைதற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற எண்ணம்ஏற்பட்டாலும் நாடியா அந்த முடிவுக்குச் செல்லவில்லை.எப்படியாவது இக்கொடியோர்களிடமிருந்து தப்பித்துஅவர்களை குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டுமென்று கருதினார். தப்பிக்க முயன்று, முடியாமல் பிடிபட்டால் தன்னையும் கொன்று விடுவார்களே என்ற பயமும் நாடியாவுக்கு இருந்தது. இருப்பினும் உயிரை பணயம் வைத்துதப்பிக்க திட்டமிட்டார். 

உயிரைப் பணயம் வைத்து உதவிய இஸ்லாமியர்...

ஒரு கட்டத்தில், மோசுல் நகரத்தில் ஒரு பயங்கரவாதியுடைய கட்டுப்பாட்டில் நாடியா அடைத்து வைக்கப்பட்டி ருந்தார்.  அவன், கடைக்குச்செல்கிறபோது, கதவை தாளிடாமல் சென்றான். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்த பயங்கரவாதியின் வீட்டைவிட்டு தப்பித்த நாடியா, பல தெருக்களைக் கடந்து ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்தார்.அந்த வீட்டுக்காரர் நசீர், சன்னி இஸ்லாமிய பிரிவைச்சார்ந்தவர். தான் கடந்து வந்த சோதனைகளையெல்லாம் நாடியா அவரிடம் விளக்கினார். அனைத்து கொடுமைகளையும்  கேட்ட அவர்கள் நாடியாவுக்கு உதவி செய்ய முன்வந்தனர். நசீர் கணவராகவும் நாடியா மனைவியாகவும் ஒரு போலி கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) தயார் செய்து மோசுல்நகரத்தைவிட்டு இராக்கிற்கு தப்பிச் செல்ல முயன்றனர். வழியில் இஸ்லாமியபயங்கரவாதிகள் சோதனை செய்தபோது, போலி பாஸ்போர்ட்டை காட்டி தாங்கள் இருவரும் கணவன் மனைவி என்று கூறி இராக் நாட்டு எல்லைக்குள் சென்றார்கள். உண்மை வெளிப்பட்டால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது தெரிந்திருந்தும் நசீர் நாடியாவுக்கு உதவி செய்தார். நாடியாவுக்குஉதவி செய்தவரும் ஒரு இஸ்லாமியர் என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது.குர்திஸ்தான் என்ற இராக் பகுதிக்கு இருவரும்வந்தபோது அங்குள்ள அரசு அதிகாரிகள் நசீரையும்,நாடியாவையும் விசாரணை செய்து, நாடியாவுக்கு நிகழ்ந்த கொடுமைகளையெல்லாம் ஊடகங்கள் மூலமாகவெளியிட்டுவிட்டனர். நாடியா இதர பாதிக்கப்பட்ட யாசிடி இளம்பெண்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு ஒரு மனித உரிமைஆர்வலர் நாடியாவை சந்தித்து அவரை இராக் தலைநகர் பாக்தாத்துக்கு அழைத்துச்சென்றார்.

ஐ. நா. சபையில் முழக்கம்

தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொன்னால்அவமானம் என்பதற்கு பதிலாக தனக்கும்,தன்னைப் போன்றவர்களுக்கும் கொடுமைகளை நிகழ்த்தியவர்களை அம்பலப்படுத்தி,அவமானப்படுத்தவேண்டும் என்றே நாடியா சிந்தித்தார். அங்கிருந்து ஜெர்மனிக்கு சென்று பிறகு லண்டன் சென்ற அவர் மனித உரிமை வழக்கறிஞரோடு ஐ.நா.மன்றத்திற்கும் சென்றார்.தங்களைப் பாலியல் அடிமையாக்கி கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று அவர் முன்வைத்த தீர்மானத்தை ஐ.நா.பாதுகாப்புக்குழு நிறைவேற்றியது. சமீப நாட்களில், மீடூ பிரச்சாரம் ஊடகங்களில் வெளியாகிறது. மேலை நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பெண்கள் துணிச்சலாக தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகளை பகிரங்கமாக்குகின்றனர். பாலியல் சீண்டலுக்கோ கொடுமைக்கோ ஆளானவர்கள், அதை வெளியில் சொல்வது அவர்களுக்கு அவமானம் அல்ல, பாலியல் சீண்டலில்,கொடுமையில் ஈடுபட்டவர்களே அவமானத்திற்குஉரியவர்கள் என்ற நிலையை இப்பிரச்சாரத்தால்உருவாக்கியிருக்கிறார்கள். நாடியாவினுடைய உறுதிமிக்க நடவடிக்கை, மீ டூவுக்கு மேலானது.நாடியா, வாய்மூடியிருக்கஒப்புக்கொள்ளவில்லை.அநாதை, பாதிக்கப்பட்டவர், அடிமை, அகதி எனவாழ்க்கை தனக்களித்த பட்டங்களை மாற்றிக்காட்டினார். பெண்ணுரிமைப் போராளியாக,நோபல் வெற்றியாளராக, ஐநா மன்ற தூதுவராக, எழுத்தாளராக அறியப்படுகிறார். இத்தகைய வீரமங்கைக்கு நோபல் பரிசு அளித்ததன் மூலம், நோபல் பரிசுக்கே பெருமை சேர்ந்திருக்கிறது.

ஜி.ராமகிருஷ்ணன்

கட்டுரையாளர் : சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.

Image result for theekkathir