Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, July 31, 2018

BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, ஊழியர் பிரச்சனைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்

Image result for BSNLEU
மத்திய சங்க செய்திகள் 


நீண்ட நாள் தீர்வு காணப்படாத ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, டில்லி தலைமையகத்தில், திரு. சௌரப் தியாகி,  Sr.GM(Estt.) அவர்களை இன்று, 31.07.2018 நமது பொது செயலர் தோழர் P. அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி, உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, ஆகியோர் சந்தித்தனர். 

ஏற்கனவே, கடந்த 10.07.2018 அன்று CMD அவர்களை சந்தித்த போது, இந்த பிரச்சனைகள் சம்மந்தமாக, சில 
கருத்துக்களை ஆழமாக நமது பொது செயலர் விவாதித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று Sr.GM(Estt.) அவர்களை பேட்டி கண்ட போது, அதன் முன்னேற்றங்களை Sr.GM(Estt.) விவரித்தார். 

அதன்படி, தீர்வு எட்டவுள்ள பிரச்சனைகள் 

01. Sr.TOA தோழர்கள் NEPP பதவி உயர்வு பெறும்போது, 7100-200-10100 சம்பள விகிதத்தில் இருந்து, 6550-185-9325 சம்பள விகிதத்திற்கு, மாற்றப்பட்டனர். காரணம், 5700-160-8100 சம்பள விகிதத்திற்கு அடுத்த சம்பள விகிதம் 6550-185-9325 தான். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பல யோசனைகளை நமது சங்கம் முன்மொழிந்தது. இறுதியாக, NOTIONAL முறையில் சம்பளம் நிர்ணயித்து, பலன்கள் அந்த தோழர்களுக்கு வழங்க, நிர்வாகம் முன்வந்துள்ளது. அதற்கு ஏதுவாக, நிர்வாக குழு ஒப்புதல், இயக்குனர் குழு ஒப்புதல் பெற்று, ஓய்வூதியம் சம்மந்தப்பட்டுள்ளதால், DoT ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.  

02. NON EXECUTIVE ஊழியர்களுக்கு E1 (அதிகாரிகள் சம்பளம்) வழங்க இயக்குனர் குழு ஒப்புதலுக்கு அனுப்ப நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.  

03. 01.01.2007 முதல் 07.05.2008 வரை பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பள இழப்பை போக்க, ஒரு கூடுதல் இன்க்ரீமெண்ட் வழங்க நாம் கோரியதன் அடிப்படையில், TTA தோழர்களுக்கு கூடுதல் இன்க்ரீமெண்ட் வழங்கி விட்டார்கள். விடுபட்ட மற்ற கேடர்களுக்கும் வழங்க வேண்டும்  என்ற நமது கோரிக்கை தற்போது ஏற்கப்பட்டு, இயக்குனர் குழு ஒப்புதலுக்கு அனுப்ப படுகிறது. 

04. RM தோழர்கள் TM இலாக்கா போட்டி தேர்வு எழுத, 10வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற  கல்வி தகுதியில் விதி விலக்கு கோரியிருந்தோம். 

10வது கல்வி தகுதி பெற்றவர்கள் எத்தனை பேர்? 10வது கல்வி தகுதி பெறாதவர்கள் எத்தனை பேர்? காலி பணியிடங்கள் எவ்வளவு ? போன்ற விவரங்களை மாநிலங்களில் இருந்து பெற்று, இயக்குனர் குழு ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும்.  

தோழமையுடன், 
E . கோபால், 
மாவட்ட செயலர்