Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, March 18, 2018

தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு CHECK OFF முறை தேவையில்லை!!!

Image result for secret ballot


அடுத்த தொழிற்சங்க அங்கீகார தேர்தலை CHECK OFF முறையில் நடத்துவது என்ற முன்மொழிவை கார்ப்பரேட் அலுவலகம் அனைத்து தலைமை பொது மேலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் 15.03.2018 அன்று ஒரு கடிதம் மூலம் அனுப்பி, அது தொட்ர்பாக அவர்களின் கருத்துக்களை தெரிவிக்கும் படி கேட்டுள்ளது. 

ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்திற்காக ஏழு அங்கீகார தேர்தல்களை ரகசிய வாக்கெடுப்பு முறைப்படி BSNL நிர்வாகம் நடத்தியுள்ளது. இவற்றில் இது வரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. ஆனால் நிர்வாகம் BSNL நிறுவனத்தின் பொருளாதார நெருக்கடியை காரணம் சொல்லி தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. அதனை விடுத்து தேவையற்ற செலவினங்களை குறைக்க ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL தலைவர்களுடன் அக்கறையுடன் கூடிய ஒரு பேச்சு வார்த்தையினை நிர்வாகம் நடத்தட்டும். 

CHECK OFF முறையில் சங்க அங்கீகாரத்தை முடிவு செய்ய நினைக்கும் நிர்வாகத்தின் முன்மொழிவை BSNL ஊழியர் சங்கம் மிக கடுமையாக எதிர்க்கும். அது முறைகேட்டிற்கும் தில்லுமுல்லுகளுக்கும் வழி வகுக்கும். எனவே இதனை எதிர்த்து BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. நிர்வாகம் அதனை ஏற்கவில்லை என்றால்அதற்கு எதிராக போராடவும் BSNL ஊழியர் சங்கம் தயங்காது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்