Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, February 16, 2018

ஒப்பந்த ஊழியர்கள் சம்பளம் மற்றும் சில செய்திகள்

Related image



ஒப்பந்த ஊழியர் சம்பளத்திற்கு, கடந்த  மாதம் வந்த நிதிக்குப்பின், நிதி எதுவும்  வரவில்லை. அதன் காரணமாக தமிழகம் முழுவதும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கான ஊதியம் கிடைக்காமல் ஊழியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். மாநிலம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். 

தமிழ் மாநில சங்கம் மாநில நிர்வாகத்துடன் பேசியது. நமது பொது செயலாளர் தோழர் P.அபிமன்யு 15.02.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள GM(BFCI) உடன் விவாதித்து உடனடியாக அதற்கான நிதியினை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியதின் அடிப்படையில் இன்று (16.02.2018) நமது ஒப்பந்த ஊழியர்களின் ஊதியத்திற்கு தேவையான நிதி தமிழ் மாநில நிர்வாகத்திற்கு வந்து விட்டது. 

ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை குறைப்பது சம்மந்தமாக 

15.02.2018 அன்று டில்லி கார்ப்பரேட் அலுவலகத்தில், GM (BFCI) அவர்களை  நமது பொது செயலர் சந்தித்து, ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை குறைப்பது சம்மந்தமாக விவாதித்தார். செலவினங்கள் குறைப்பதிற்க்காக ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையை குறைப்பதாக நிர்வாகம் தெரிவித்த கருத்திற்கு, நமது எதிர்ப்பினை அழுத்தமாக நமது பொது செயலர் பதிவு செய்தார். 

மாற்று ஆலோசனையாக, மின்சாரம், வாகன வாடகை போன்ற விஷயங்களில் செலவினங்களை குறைக்க நமது பொது செயலர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்த பிரச்சனை சம்மந்தமாக, மேல்மட்ட நிர்வாகத்துடன் விவாதிப்பது என நமது மத்திய சங்கம் முடிவெடுத்துள்ளது. 

PLI கமிட்டி கூட்டம் 

நிறுவனத்தின் லாப நட்ட கணக்கிற்கு பதிலாக, வருவாயை கணக்கில் கொண்டு நிர்வாகம் போனஸ் வழங்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ளோம். அடுத்த கூட்டம் 09.03.2018 அன்று நடைபெறும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்