Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 30, 2017

ஒப்பந்த ஊழியர் சம்பள தாமதத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்



ஒப்பந்த ஊழியர்களுக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் நவம்பர் மாத சம்பளம் பட்டுவாடா செய்யப்படாத நிலை. நிர்வாகத்திடம் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படாத சூழல். இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட BSNLEU மாவட்ட செயற்குழு முடிவு எடுத்தது. 

அந்த முடிவின்படி, இன்று, (30.12.2017) சேலத்தில், மாவட்ட பொது மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. BSNLEU - TNTCWU மாவட்ட சங்கங்கள் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் M . விஜயன், BSNLEU மாவட்ட தலைவர்  மற்றும் தோழர் M செல்வம், TNTCWU மாநில உதவி தலைவர் கூட்டு தலைமை தாங்கினர். 

TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கரன், துவக்கவுரை வழங்கினார். BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P . தங்கராஜு, M . சண்முகம், M . பன்னீர் செல்வம், P.M.ராஜேந்திரன், R . ஸ்ரீனிவாசன், TNTCWU மாவட்ட பொருளர் தோழர் P. செல்வம் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

பின்னர் BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன பேருரை வழங்கினார். 

TNTCWU மெய்யனுர் கிளை நிர்வாகி தோழர் விஜயகுமார் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள்(30 பெண்கள் உட்பட)  கலந்து கொண்டனர். 

பின்னர், DGM (HR/Admn) அவர்களிடம் பெரும் திரளாக சென்று கோரிக்கை மகஜர் வழங்கினோம். AGM (HR/Admn) முன்னிலையில், DGM (Planning) அவர்களை தொடர்பு கொண்டு நிலைமையை விவாதித்தார். நிர்வாகம் சார்பாக விரைந்து நடவடிக்கை எடுத்து பிரச்னையை தீர்க்க DGM உறுதி அளித்துள்ளார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்