Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, 30 December 2017

செவ்வை - மாவட்ட செயற்குழு


28.12.2017 அன்று நமது மாவட்ட செயற்குழு, சேலம் செவ்வை தொலைபேசி நிலைய, 7வது தளத்தில் சிறப்பாக நடைபெற்றது. ,மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார்.  

மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், அஞ்சலி உரை வழங்கினார். மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R . ஸ்ரீனிவாசன் அனைவரையும் வரவேற்றார். 

BSNLEU தமிழ் மாநில சங்க உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து சிறப்புரை வழங்கினார். 

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்கவுரை வழங்கினார். 

பின்னர், நடைபெற்ற விவாதத்தில், 34 தோழர்கள் பங்குபெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதிலளித்து, தொகுப்புரை வழங்கியபின், தோழர் P . செல்வம் மாவட்ட அமைப்பு செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். 

கூட்டத்தில், இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டம்  பரிசீலிக்கப்பட்டது. காலியாக இருந்த மாவட்ட அமைப்பு செயலர் பொறுப்புக்கு, தோழர் P . முருகேசன், [OS(P), செவ்வை கிளை] ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

கூட்டத்தில், ஒப்பந்த ஊழியர் சம்பள தாமதத்தை கண்டித்து, உடனடியாக, 30.12.2017 அன்று பொது மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது, TNTCWU சேலம் மாவட்ட மாநாட்டை 2018 பிப்ரவரி மாதத்தில் நடத்த உதவுவது, உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்