Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, 8 December 2017

சிறப்பு கூட்டம் - சேலம் செவ்வாய்பேட்டை - 06.12.2017


வேலை நிறுத்த கோரிக்கை விளக்க சிறப்பு கூட்டம், செவ்வையில், 06.12.2017 அன்று சிறப்பாக நடைபெற்றது. BSNLEU, SNEA, AIBSNLEA, FNTO, TEPU சங்கங்களை உள்ளடக்கி, All Unions and Associations of BSNL பதாகையின் கீழ், சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு கூட்டத்திற்கு, தோழர்கள் M . விஜயன்(BSNLEU), N . சந்திரசேகரன்(SNEA) கூட்டு தலைமை தாங்கினர். 

AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M. சண்முகசுந்தரம், வரவேற்புரை வழங்கினார். TEPU மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணமூர்த்தி, SNEA மாவட்ட செயலர் தோழர் R. மனோகரன், BSNLEU மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

FNTO மாநில நிர்வாகி, தோழர் C . கமலக்கூத்தன், TEPU மாநில செயலர்(பொறுப்பு) தோழர் P . பூசப்பன், AIBSNLEA மாநில அமைப்பு செயலர் தோழர் R. மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

SNEA மாநில உதவி செயலர் தோழர் M .R .தியாகராஜன், BSNLEU தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், ஆகியோர் எழுச்சி மிகு உரை வழங்கினார்கள்.

மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளாக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தை தோழர் 
S. ஹரிஹரன்(BSNLEU) நன்றி கூறி முடித்து வைத்தார். வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில், 100 சதம் வெற்றிகரமாக்க கூட்டம் உறுதி பூண்டது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்