Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, September 17, 2017

மத்திய அரசின் - இன்னொரு சீர்குலைவு வேலை

Related image


பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தை சீர்குலைக்கும் முயற்சியில் தற்போது மோடி அரசு தீவிரம் காட்டிவருகிறது. அதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் டவர்களை நிர்வகிக்க தனி நிறுவனம் ஒன்றை உருவாக்குவதாக அறிவித்திருக்கிறது. ஏற்கெனவே இந்தியாவின் தொலைத் தொடர்பு முழுவதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின்கையில் சென்று சேரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பிரதமர் மோடியே ரிலையன்ஸ் ஜியோ விற்கு விளம்பர தூதுவராக காட்சியளித்தார். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகின்றன.

ஆனால் அதையெல்லாம் மீறி மக்கள் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீது முழு நம்பிக்கை வைத்து ஆதரவளித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம், தற்போது லாபத்தில் இயங்க துவங்கியிருக்கிறது. இந்நிலையில் அதனை சீர் குலைக்கும் நோக்கத்தோடு அதன் டவர்களை நிர்வகிக்கதனி நிறுவனம் துவங்குவதன் மூலம் பிஎஸ்என்எல்நிறுவனத்தின் பெரும்பகுதி வருவாய் இந்தநிறுவனத்தின் பெயரில் பிரிக்கப்படும். பின்னர்பிஎஸ்என்எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது. அதில் இருக்கும் ஊழியர்களுக்கு ஊதியம்கொடுக்க முடியவில்லை. ஆகவே இதனை மூடிட வேண்டும் அல்லது தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என்ற அடிப்படையில் சீர்குலைவுசதி வலைப் பின்னப்பட்டிருப்பதாக பிஎஸ்என்எல்சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கெனவே இந்தியாவில் தொலைத் தொடர்புசேவையில் மொபைல் சேவை அனுமதிக்கப்பட்ட போது, அதன் உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே அரசு வழங்கியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வழங்கவில்லை. அதன் பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி 5 வருடங்களுக்கு பின்னர் 2002இல் பிஎஸ்என்எல் நிறுவனம் மொபைல் சேவையை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி பெற்றது. அதன் பின்னரே தனது சேவையை துவங்கிய பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களின் பேராதரவோடு மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது. தற்போதும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது.

இதன் காரணமாக 2015-16ஆம்நிதியாண்டில் பிஎஸ்என்எல் ரூ . 3 ஆயிரத்து880 கோடி லாபம் ஈட்டியிருக்கிறது. அதே நேரம்இதுவரை கிராமப்புற தொலைபேசி சேவைக்காகபிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டியரூ. 10 ஆயிரத்து 40 கோடியை அளிக்க மத்தியஅரசு மறுத்து வருகிறது. இருப்பினும், இந்த லாபத்திற்கு அடிப்படை காரணியாக இருப்பது மொபைல் சேவை மற்றும் அதனுடன் இணைந்த மொபைல் டவர்ஆகும்.

தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 66 ஆயிரம் டவர்களை பிரித்து தனி நிறுவனமாக்குவதன் மூலம் அதை நஷ்டத்தை நோக்கி தள்ளிடமுடியும். அதன் பின்னர் இந்தியாவின் ஒட்டு மொத்த தொலைத் தொடர்பு சேவையையும் எளிதாக ரிலையன்ஸ்க்கு மடைமாற்ற முடியும் என்பதுதான் மத்திய பாஜக அரசின் திட்டம் தேசத்தின் பொதுச்சொத்தை சீர்குலைத்து தனியாருக்கு சேவகம் செய்ய துடியாய் த்துடிக்கிறது.

நன்றி: தீக்கதிர் தலையங்கம் 

Image result for theekkathir