Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, 9 March 2017

சேமநலநிதிக்குழு கூட்ட முடிவுகள்

Image result for welfare committee

நமது சேலம் மாவட்டத்தில், 7-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கு பிறகு, புதிய சேமநலநிதிக்குழு, உருவாக்கப்பட்டு முதல் கூட்டம் இன்று (09.03.2017) நடைபெற்றது. 

நமது சங்கம் சார்பாக, நமது மாவட்ட தலைவர் தோழர். M. விஜயன், OS, மெயின் CSC., சேலம் கலந்து கொண்டார். 

கூட்டத்தில், கீழ் கண்ட நமது கோரிக்கைகள் ஏற்கப்பட்டது. 

01. 20 வருடம் சேவை முடித்த ஊழியர்களுக்கு ரூ.2000 ஊக்க தொகையும், 30 வருட சேவை முடித்த ஊழியர்களுக்கு ரூ. 3000 வழங்கப்படும்.

02. மூக்கு கண்ணாடி வாங்க வழங்கப்படும் தொகை ரூ. 1500 லிருந்து ரூ. 2500 ஆக உயர்த்தப்படும்.

03. முழு உடல் பரிசோதனை செய்ய வழங்க பட்ட ரூ. 1500. இனி, ரூ.3500 ஆக உயர்த்தப்படுகிறது. 

04. உறுப்பினர் இயற்கை எய்தினால்,
குடும்பத்துக்கு  வழங்கப்பட்ட உதவி தொகை ரூ. 17000 திலிருந்து ரூ. 20000 ஆக உயர்த்தப்படும். 

05. சேம நல வாரியத்திற்காக பணிபுரியும் ஊழியர்களுக்கு அலவன்ஸ் உயர்த்தப்பட்டுள்ளது. இனி, AO வுக்கு மாதம் ரூ. 1000 JAO வுக்கு ரூ. 750, OS /AOS வுக்கு ரூ.500, Gr.D க்கு ரூ. 400 வழங்கப்படும். 

இது போக, நடப்பில் உள்ள, கைபேசி கடன் ரூ. 5000, கணினி கடன் ரூ. 25000, திருமண கடன் ரூ. 50000 தொடரும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்