Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 6, 2016

04.06.2016 - முப்பெரும் விழா - ஆத்தூர்


வெற்றி விழா, சேவை கருத்தரங்கம், பணி நிறைவு பாராட்டு விழா என முப்பெரும் விழா, ஆத்தூரில் 04.06.2016 அன்று சிறப்பாக நடை பெற்றது.  மாவட்ட உதவி தலைவர் தோழர் N . செல்வராஜ், தலைமை தாங்க, மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன் முன்னிலையில், தேசிய கொடியை மெய்யனூர் கிளை செயலர் தோழர் P . சம்பத், ஏற்றி வைத்தார். கோஷங்கள் விண்ணைபிளக்க, மாவட்ட உதவி தலைவர் தோழர் V . சின்னசாமி, சங்க கொடியை ஏற்றி வைத்தார். 

முதல் நிகழ்ச்சியாக, வெற்றி விழா கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலர், தோழர் E . கோபால், வரவேற்புரை நிகழ்த்த, மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, துவக்கஉரை வழங்கினார். தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், சிறப்புரை வழங்கினார். முன்னாள் மாநில உதவி செயலர் தோழர் M. நாராயணசாமி, வாழ்த்துரை வழங்கினார். 

இரண்டாவது நிகழ்ச்சியாக, சேவை கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்க, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், வரவேற்புரை வழங்கினார்.
வரவேற்புரை வழங்கும் போது, மாவட்டம் முழுவதும் சேவை சம்மந்தமான தேவைகள், ஊழியர்களின் எதிர்பார்புகள், ஊழியர்கள் அன்றாடும் சந்திக்கும் சேவை சம்மந்தமான பிரச்சனைகள், உள்ளிட்ட விஷயங்களை கோரிக்கைகளாக, மாவட்ட செயலர் முன் வைத்தார். 

நம் அழைப்பை ஏற்று, நிகழ்ச்சியில், கலந்து கொண்ட உயர் அதிகாரிகள் கௌரவபடுத்தபட்ட பின், கருத்தரங்கம் துவங்கியது. முதலில், திரு. C . கந்தசாமி, AGM (HR /Admn), கருத்துரை வழங்க அவரை தொடர்ந்து, திரு. அண்ணாதுரை DGM (Rural ), திரு. M . முத்துசாமி, DGM (Fin.), திருமதி R . உமா, DGM (HR /Admn), ஆகியோர் சேவை சம்மந்தமாக, கருத்துரை வழங்கினார்கள். இறுதியாக, நமது முதன்மை பொது மேலாளர் உயர்திரு. S. சபீஷ், ITS சிறப்புரை வழங்கினார்.  அவர்தம் உரையில், அகில இந்திய அளவில் சேலம் மாவட்டம் பெற்ற விருது, சேவை விரிவாக்கம், 4G சேவைகள், போட்டி சுழல், நமது இலக்குகள் உள்ளிட்ட பல விஷயங்களை விளக்கி பேசினார். அவரை போலவே, அனைத்து உயர் அதிகாரிகளின் பேச்சும் பயனுள்ளதாக இருந்தது. மாவட்ட உதவி செயலர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி சேவை கருத்தரங்கை முடித்து வைத்தார். 

உணவு இடைவேளைக்கு பின், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர், CITU மாவட்ட குழு உறுப்பினர் தோழர் M. குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மூன்றாவது நிகழ்ச்சியாக, பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மாவட்ட உதவி தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்க, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், வரவேற்புரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தோழர்களை அறிமுக படுத்தி, அறிமுக உரை வழங்கினார். 2016 ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெற்று, நிகழ்வில் பங்கேற்ற, தோழர்கள் இளங்கோவன், சுப்பிரமணியம், அஸ்லாம், பழனிசாமி, 
சின்னசாமி ஆகியோர் மாநில செயலர், 
தோழர் A. பாபுராதாகிருஷ்ணனால் கௌரவப் படுத்தப்பட்டனர். 

முன்னாள் மாநில உதவி செயலர், தோழர் M. நாராயணசாமி, தர்மபுரி BSNLEU மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினார்கள். மாவட்ட உதவி தலைவர் தோழர்  V . சின்னசாமி, ஏற்புரை வழங்கினார். தோழர் இளங்கோவன் பாட்டு பாடி, பாராட்டை ஏற்றார். மாவட்ட உதவி செயலர் தோழர் P . கனகராஜ், நன்றி கூறி சிறப்பான விழாவை முடித்து வைத்தார். 

மாவட்டம் முழுவதுளுமிருந்து, 300 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு வெற்றி விழாவை வெற்றி பெற செய்தனர். அதே போல், மரியாதைக்குரிய PGM துவங்கி, அத்துணை உயர் அதிகாரிகளும் சேவை கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கி, கருத்தரங்கை பயனுள்ளதாக, மாற்றினர். சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நமது நெஞ்சு நிறை நன்றிகள்.  

அன்பான உபசரிப்பு, நேர்த்தியான ஏற்பாடுகள், சுவையான சைவ மற்றும் அசைவ உணவுகள், வழி நெடுங்கிலும் கொடிகள், தோரணங்கள், சிறப்பான விளம்பரங்கள், என நல்ல ஒரு விழாவை ஏற்பாடு செய்திருந்த ஆத்தூர் நகர மற்றும் ஊரக கிளைகளை எவ்வுளவு பாராட்டினாலும் தகும். ஆத்தூர் கிளைகளுக்கு மாவட்ட சங்கத்தின் செவ்வணக்கங்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்