Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, June 20, 2016

01.01.2017 முதல் ஊதிய மாற்றம் உறுதி - CMD தகவல்



AIBSNLEA சங்கத்தின் 5வது அகில இந்திய மாநாடு 17.06.2016 அன்று மைசூரில் துவங்கியது. இம்மாநாட்டில், BSNLEU சங்கத்தின் சார்பாக நமது பொதுச் செயலர் தோழர்.P. அபிமன்யூ கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.  CMD BSNL அவர்களும் கலந்து கொண்டார். 

CMD அவர்களை மேடையில் வைத்து கொண்டு,  நமது G.S தனது உரையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, நமது CMD, பெங்களூரில் பேசும் பொழுது, BSNL ஊழியர்கள் 1.1.2017 புதிய சம்பள மாற்றம் பெற இயலாது, அதற்கு காரணம்   BSNL  நஷ்டத்தில் உள்ளது என தெரிவித்ததை சுட்டி காட்டினார். 

BSNLEU சங்கம், உடனடியாக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ததையும் சுட்டி காட்டி, DPE வழிகாட்டுதலின் படி BSNLலில் 1.1.2017 முதல் பணி  புரியும் அனைவருக்கும் சம்பள மாற்றம் செய்தாக வேண்டும் என்று வலுவாக வலியுறுத்தினார். 

தோழர்.P. அபிமன்யூ அவர்களின், வாதத்தை கேட்டுக் கொண்டிருந்த நமது CMD அவர்கள், இறுதியாக வாழ்த்துரை வழங்கும் போது, தோழர்.P. அபிமன்யூ அவர்களின் உரையை மேற்கோள்காட்டி,  நிச்சயம் 1.1.2017 முதல் சம்பள மாற்றம் BSNLலில் பணிபுரிபவர்களுக்கு உண்டு என்பதை மாநாட்டின் பலத்த கர ஒலிக்கிடையே தெரிவித்தார்.

இதனை நமது மத்திய சங்கம், இணையத்தில், செய்தியாக வெளியிட்டுள்ளது. 

தோழமையுடன்,
E . கோபால், 
மாவட்ட செயலர்