Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, May 1, 2016

ஓய்வறியா சூரியனின் ஒப்பற்ற விழா




BSNLEU மதுரை மாவட்ட செயலர் தோழர் S . சூரியன், அவர்கள் 30.04.2016 அன்று இலாக்கா பணியில் இருந்து ஓய்வு பெற்றார். தோழருக்கு மதுரை மாவட்ட சங்கம் சார்பாக, 30.04.2016 அன்று மதுரை, தல்லாகுளம், லெவல் 4 வளாகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது. 

மதுரை மாவட்ட தலைவர் தோழர் C . செல்வின் சத்யராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி தோழர் S . சாத்தாவு தொகுப்புரை வழங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் A . நெடுஞ்செழியன், வரவேற்புரை வழங்கினார்.

தமிழ் மாநில செயலர் தோழர் A . பாபுராதாகிருஷ்ணன், அகில இந்திய உதவி பொது செயலர் தோழர் S . செல்லப்பா, மதுரை மாவட்ட பொது மேலாளர் திருமதி. S . E . ராஜம் ஆகியோர் சிறப்பு அழைப்பாழர்களாக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். 

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தோழர் R. அண்ணாதுரை, SZIEF  முன்னால் பொது செயலர் தோழர் E. M . ஜோசப், AIBSNLEA மாநில செயலர் தோழர் S . சிவகுமார், SNATTA மாநில செயலர் தோழர் 
P . அழகுபாண்டியராஜா, TNTCWU மாநில செயலர் தோழர் C . வினோத்குமார், தமிழ் மாநில முன்னால் உதவி செயலர் தோழர் M . நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். 

நூற்றுக்கனக்கான தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். நமது மாவட்டத்திலிருந்து, மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாவட்ட உதவி செயலர் தோழர் S. ஹரிஹரன், ஆகியோர் கலந்து கொண்டோம். 

சிறப்பான இடம், அன்பான உபசரிப்பு, திரளான பங்கேற்பு என விழா சிறப்பாக இருந்தது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்