Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, 13 April 2016

நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கையில் BSNLEU சங்கத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி!

Image result for bsnl jto recruitment 2016



2007ம் ஆண்டு ஆளெடுப்பில் பணி நியமனம் பெற்ற அனைத்து TTA தோழர்களையும் JTO போட்டி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என நமது மத்திய சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 

2007ம் ஆண்டிற்கான TTA காலியிடங்களுக்கு தேர்வு பெற்றிருந்த போதிலும், பல தோழர்கள் பயிற்சி முடித்து 01/07/2008க்குப் பின்தான் பணி நியமனம் பெற்றனர். அத்தகைய தோழர்களை தேர்வு எழுத நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அந்த தோழர்கள் நீதி மன்றமும் சென்றனர். ஆந்திர நீதிமன்றம் அவர்களை தேர்வுக்கு அனுமதிக்குமாறு நிர்வாகத்திற்கு உத்திரவிட்டது.

நீதிமன்ற உத்திரவை அனைத்து தோழர்களுக்கும் அமுல்படுத்திட நமது மத்திய  சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. தற்போது  2007ம் ஆண்டு   TTA ஆளெடுப்பில் பணி நியமனம் பெற்ற அனைவரையும்  22/05/2016 நடைபெறவுள்ள JTO போட்டித் தேர்வெழுத அனுமதித்து நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது.

நேரடி நியமன TTA தோழர்களின் கோரிக்கையில் நமது  BSNLEU சங்கத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி இது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்