Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, December 19, 2015

தூய்மைப் பணியில் பிஎஸ்என்எல் ஊழியர்கள்




மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்எம்டிஏ காலனியில் வியாழனன்று (டிச.17) பிஎஸ்என்எல் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.மழைவெள்ளக் காலத்தில் அனைத்து தனியார் துறை கைபேசிகள் செயலிழந்தன. தனியார் கைப்பேசிகள் 5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை செயல்படாமல் ஸ்தம்பித்து நின்றன. அதேசமயம் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் கைப்பேசிகள் மட்டுமே இயங்கின. ஆங்காங்கு ஏற்பட்ட பாதிப்புகள் கூட இரண்டே நாட்களில் சரிசெய்யப்பட்டன.இயற்கைச் சீற்றம் மிகுந்த காலத்திலும் பொதுச்சேவையில் முன்னணி பங்களிப்பு செய்யும் பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள், வெள்ள நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். விருகம்பாக்கம் கால்வாயில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் எம்எம்டிஏ காலனி பகுதி மூழ்கியது. அப்பகுதியில் பிரதான சாலைகளில் உள்ள குப்பைக் கழிவுகளை மாநகராட்சி அகற்றியுள்ளது.

உட்புறச்சாலைகளில் குப்பைக் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன.இந்நிலையில், பிஎஸ்என்எல் எம்பிளாயிஸ் யூனியன் தமிழ்நாடு சர்க்கிள் மாநிலச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் பிரேமா, பிஎஸ்என்எல் கான்ட்ராக்ட் ஊழியர்கள் சங்கத் தலைவர் முருகையா, செயலாளர் வினோத் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எம்எம்டிஏ காலனியை சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர்.எம்எம்டிஏ காலனி பேருந்து நிலையத்தில் தொடங்கிய துப்புரவுப்பணியை, பிஎஸ்என்எல் தமிழ்நாடு சர்க்கிள் முதன்மை பொதுமேலாளர் என்.பூங்குழலி ஐடிஎஸ், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.எம்எம்டிஏ காலனி, அரசு மேல்நிலைப் பள்ளி, மார்க்கெட், உட்புறச்சாலைகள், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் துப்புரவுப் பணி செய்து, பிளீச்சிங் பவுடர்களையும் தெளித்தனர்