Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 24, 2014

எழுச்சியுடன் துவங்கியது கையெழுத்து இயக்கம்



23.12.2014 அன்று சேலத்தில், எழுச்சியுடன் துவங்கியது மக்கள் சந்திப்பு இயக்கம். MAIN தொலைபேசி நிலையம் வாயிலில் நடைபெற்ற சிறப்பு கூட்டதிற்க்கு தோழர்கள் S. தமிழ்மணி, (BSNLEU), G. வெங்கட்ராமன், (NFTEBSNL), P. சம்பத், (SNEA),  S. கணபதி, (AIBSNLEA), கூட்டு தலைமை தாங்கினார்கள்.

 FORUM அமைப்பின் கன்வீனரும், BSNLEU சேலம் மாவட்ட செயலருமான, தோழர் E. கோபால், அனைவரையும் வரவேற்று, FORUM முடிவுகளை விளக்கி பேசினார். 

AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர் P. வேணுகோபால், முதல் கையெழுத்துதிட்டு, இயக்கத்தை துவக்கி வைத்தார். உழைக்கும் வர்கத்தின் விடிவெள்ளிகளான CITU மற்றும் AITUC சார்பாக, CITU மாநில உதவி தலைவர் தோழர் S.K. தியாகராஜன், AITUC மாவட்ட செயலர் தோழர்  M. முனுசாமி, ஆகியோர் எழுச்சி உரை ஆற்றி, கையெழுத்திட்டனர். 

தோழர் K.G. நாராயணகுமார், மாநில நிர்வாகி SNEA(I), தோழர் K. கோவிந்தராஜ், மாநில நிர்வாகி AIBSNLEA, தோழர் P. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலர் TEPU, ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

தோழர் P. ராஜா, மாநில உதவி தலைவர், NFTEBSNL, உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொன்ட இந்த கூட்டதிற்க்கு, தோழர் C. பாலகுமார், தலைவர், FORUM மற்றும் மாவட்ட செயலர், NFTEBSNL விளக்க உரை ஆற்றி நன்றி கூறினார்.

கூட்டத்தில் சுமார் 150 ஊழியர்கள் (20 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்வில் சுமார் 600 கையெழுத்துக்கள் பழைய பேருந்து நிறுத்தத்தில் பெறப்பட்டன.