Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, February 27, 2014

மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பாடகர்கள்!



மோடியின் மோசடிப் பிரச்சாரத்திற்கு பெரும் செலவில் பின்னணிப் பாடகர்கள்எக்னாமிக் டைம்ஸ்அம்பலப்படுத்துகிறது. 
 மக்கள் மத்தியில் போலியான மலிவுப் பிரச்சாரத்தைச் செய்வது எப்படி என்பதற்கு மோடியின் பின்னால் உள்ளநிபுணர்கள் குழுவை ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியுள்ளது.தேர்தல் காலம் நெருங்க நெருங்க பாஜக-வினால்பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி எந்த எந்த வகையில் புதிய புதிய அறிக்கைகளை விட்டுமக்களை ஏமாற்ற முடியும் என அனைத்துத் துறை நிபுணர்களிடமும் ஆலோசனை கேட்டுவருகிறார்.தேர்தலை மைய்யமாக கொண்டு மூன்று நிலையில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்.அது ……..
1. மக்களை ஏமாற்றும் புதிய திட்டங்கள்,
2. அதை மைய்யமாக வைத்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றுவது,
3. அவற்றை அப்படியே ஊடகங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது;
இதுதான் மோடியின் தேர்தல் மோசடித் திட்டம்.மோடியின் இந்தமோசடித்திட்டத்திற்கு வலுவூட்ட பலநிபுணர்கள் கொண்டகுழு உள்ளதுஇக்குழுவில் பொருளாதார நிபுணர் கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர்அரவிந்த பங்கரியாபிரபல பங்குவர்த்தக முதலீட்டு ஆலோசகர் குரு ரவி மந்தாகொள்கை ஆய்வு மய்யக்குழுவில் உறுப்பினராக இருந்த ஜெகதீஷ் திபோராய்மனீஷ் சபர்வால் போன் றோர் உள்ளனர்.
இந்தக்குழுவின் தலைவர் போல் செயல்படும் ஜகதீஷ் பகவதிநோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மீதுமதிப்பு கொண் டவர்ஆனாலும்அவரது சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்டவர்இதில் பங்கரியா பாதுகாப்பு மற்றும் அயலுறவுத்துறை விவாகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவராம்இந்தக்குழு தொடர்ந்துஇந்தியப் பாதுகாப்புபொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மோடிக்கு ஆலோசனை அளித்துவருகிறதுஇது குறித்து பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த ஒருவர் இந்தக் குழுவின்ஆலோசனையின் பேரில் நரேந்திர மோடியின் உரைகள் தயாரிக்கப்பட்டுள்ளனமேலும் இவர்கள் அனைவரும்மோடியின் தேர்தல் களத்தின் பின் புலத்தில் உள்ளனர்.இந்தக் குழு தற்போது நாடு எதிர்நோக்கி இருக்கும்முக்கிய பிரச்சினையான மின்சாரத்தை முதன்மையாக எடுத்துள்ளது.24 மணி நேரம் மின்சாரம் என்பதுசாமானியர்களின் கனவாகும்இதை மனதில் கொண்டு மின்சாரம் மற்றும் இந்த பிரச்சினையை மக்களிடம்எப்படி கொண்டு சேர்ப்பதுஇதன் மூலம் தன்னை பொருளாதார வளர்ச்சிக்காக பாடுபடப் போகும் ஒருவராககாட்டிக் கொள்ள நரேந்திர மோடிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்நிறைவேற்ற இயலாதவை!மேலும் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகை கூறுவது மோடியின் வளர்ச்சி பற்றிய பேச்சுக்களின் பின் புலத்தில்பொருளாதாரதொழில்வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய ஆலோசனைக்குழுவின்மேற்பார்வையில் நடந்துவருகிறதுஇவர்களின் ஆலோ சனைப்படியே நாட்டின் எதிர்கால வளர்ச்சி குறித்தஉரையை அனைத்து மேடைகளிலும் பேசி வருகிறார்.
பொருளாதார நலிவில் சிக்கியுள்ளதாக மாயையை முதலில் தனது பேச்சால் உருவாக்கிஅதன் பிறகுஅதற்கான திட்டங்கள் இவை என்று மக்களிடம் கூறி வாக்காளர்களை கவர்ந்து (ஏமாற்றி)வருகிறார்உண்மையில் மோடிக்கு பின்புலத்தில் நிற்கும் நிபுணர்களின் ஆலோசனைகள் பெரும்பாலானவைநிறைவேற்ற இயலாதவையாகவே உள்ளன .                                                          (நன்றி:எக்னாமிக்டைம்ஸ்நாள்:19.2.2014)

ஒரு சின்ன புள்ளி விவரம் பார்ப்போமா ?
                      2012 ம் ஆண்டு ராஜ்ஜிய சபையில் கேள்விஒன்றிற்கு பதில் அளிக்கையில் , தெரிவிக்கப் பட்டசெய்தி , குஜராத்தில் , 41 % குழந்தைகள் போதியஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் . 55.3% சதவிகிதம் பெண்கள் ரத்த சோகையினால்பாதிக்கப் பட்டுள்ளனர் என்பதும் தான் ..... மீன்பிடிப்பதையும் மீன் பிடிக்கக் கற்றுக் கொள்வதையும்நமக்கு அப்பறம் சொல்லிக் கொடுக்கட்டும் , அதே காலக்கட்டத்தில் ,தமிழகத்தில் மேற்சொன்ன குறைபாடுகள்கொண்ட மக்கள் குஜராத்தை காட்டிலும் குறைவு என்பது கூடுதல் தகவல் .... மக்களை ஆரோக்கியமாகவைக்க வேண்டும் என்றால் , முதலில் கர்பிணிகள் , குழந்தைகள் போன்றவர்களுக்கு ஊட்டச் சத்துக்கள்அவசியம் , மலிவு விலையில் உணவு அவசியம் . நதியின் மீது சோலார் தட்டுக்களை அப்பறம் அமைக்கலாம் ,முதலில் மக்கள் தட்டில் சோற்றை  போடட்டும் . . . .