BSNLEU - TNTCWU, தமிழ் மாநில சங்கங்கள் சார்பாக, ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க கோரி, இன்று, (27.10.2026), மாவட்ட தலை நகரங்களில், ஆர்ப்பாட்டமும், மகஜர் கொடுக்கும் இயக்கமும் நடத்த அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. AIBDPA தமிழ் மாநில சங்கமும் போராட்டத்திற்கு, ஆதரவு வழங்கியிருந்தது. நமது சேலம் மாவட்டத்தில், புயல் மழை அச்சத்தால், மகஜர் கொடுக்கும் இயக்கம் மட்டும் சிறப்பாக நடைபெற்றது.
BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க தலைவர்கள் / தோழர்கள் திரளாக சென்று, மரியாதைக்குரிய திரு N. வினோத், உதவி பொது மேலாளர் (நிர்வாகம்), GM அலுவலகம், சேலம், அவர்களிடம் மகஜர் வழங்கினார்கள். ஒப்பந்த ஊழியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய போனஸ் கிடைத்திட அவரிடம் விவாதிக்கப்பட்டுள்ளது. அவரும் ஒப்பந்ததாரரிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளார்.
நிகழ்வில், BSNLEU சார்பாக தோழர்கள் N. பாலகுமார், DVP., J. ஸ்ரீனிவாசராஜு, BS., K. செங்குட்டுவன், AIBDPA சார்பாக, தோழர் E. கோபால், ACS., TNTCWU சார்பாக தோழர்கள் M. செல்வம், DS., A. சந்தோஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள். ஒப்பந்ததாரர்கள், திருவாளர்கள் புதுக்கோட்டை செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் கார்த்திக் எண்டர்பிரைசஸ் இருவரிடமும் இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாகவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தபட்டுள்ளது. அவர்களும், உரிய முறையில், போனஸ் வழங்க, உறுதியளித்துள்ளார்கள். இரண்டு மாவட்ட சங்கங்களும், இந்த பிரச்சனையை, தொடர்ந்து கண்காணிக்க வருகிறது.






