Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, October 12, 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் கோரி ஆர்ப்பாட்டம்



BSNLEU மற்றும் TNTCWU தமிழ் மாநில சங்க அறைகூவலுக்கிணங்க, ஒப்பந்த ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச போனஸ் ரூ. 7000 வழங்கிடக்கோரி, நமது மாவட்ட சங்கங்கள் சார்பாக, 12.10.2017, வியாழக்கிழமை, இன்று, முதன்மை பொது மேலாளர் அலுவலகம் வாயிலில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன், தலைமை தாங்கினார். TNTCWU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் செல்வம் போராட்டத்தை துவக்கிவைத்தார். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், BSNLEU மாவட்ட உதவி செயலர்கள் தோழர் S . ஹரிஹரன், தோழர் M . சண்முகம் ஆகியோர் விளக்கவுரை வழங்கினர். 

BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், கண்டன சிறப்புரை வழங்கினார். 

மாவட்டம் முழுவதிலுமிருந்து, 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டனர். BSNLEU சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . பன்னீர்செல்வம், P . செல்வம், P .M . ராஜேந்திரன், மெய்யனுர் கிளை செயலர் தோழர் வெங்கடேசன் மற்றும் TNTCWU மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தை BSNLEU GM அலுவலக கிளை செயலர் தோழர் N . பாலகுமார் நன்றி கூறி முடித்து வைத்தார். 

பின்னர் வந்திருந்த தோழர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மகஜரை துணை பொது மேலாளர் (நிர்வாகம்) திரு. பொன்னுசாமி அவர்களை நேரில் சந்தித்து வழங்கினோம். நம் முன்னே ஒப்பந்ததாரகளை அழைத்து போனஸ் பட்டுவாடா செய்யும்படி உத்தரவிட்டார். ஓரிரு நாளில் பட்டுவாடா நடைபெற வில்லையென்றால் 16.10.2017 அன்று அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடஉள்ளதை நிர்வாகத்திற்கு தெரிவித்து விட்டு வந்துள்ளோம்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்