Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 12, 2016

நிலுவை பிடித்தம் சம்மந்தமாக கார்ப்பரேட் அலுவலக வழிகாட்டுதல்

Image result for excess recovery


ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட நிலுவைகள் ஏதேனும் தவறென்று தெரிய வரும் பட்சத்தில் அந்த நிலுவையை சம்பந்தப்பட்ட ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது எனவும், அதனை சம்பந்தப்பட்ட இலாக்கா தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது 18/12/2014ம் தேதிய தீர்ப்பில் கூறியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பை BSNLலில் அமுல்படுத்தக்கோரி நமது சங்கம் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தது. 

அத்தகைய நிலுவை தள்ளுபடி விவகாரங்கள் DOTக்கு உரிய பரிந்துரையோடு அனுப்பப்பட வேண்டும் எனவும் அதனை DOT பரிசீலித்து செலவின இலாக்காவின் அனுமதியோடு உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் DOT வழிகாட்டுதல் வழங்கியிருந்தது. 

மேற்கண்ட DOTயின் வழிகாட்டுதலின்படி, தவறான நிலுவைப்பிடித்த தள்ளுபடி விவகாரங்கள் மாநில நிர்வாகத்தின் உரிய ஒப்புதலோடு BSNL தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என CORPORATE அலுவலகம் 09/09/2016ல் உத்தரவிட்டுள்ளது.

நமது சங்கத்தின் தொடர் முயற்சியின் பலனாக, நிலுவைப் பிடித்தத்தில் இருந்து விலக்குப்பெற, பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு  தற்போது ஒரு வழி பிறந்துள்ளது. வாழ்த்துக்கள்.

தோழமையுடன் 
E . கோபால்,
மாவட்ட செயலர் 
கார்ப்பரேட் அலுவலக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்